வரலாற்று சாதனை நிகழ்த்தியதில் மகிழ்ச்சி: விராட் கோஹ்லி
இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது வரலாற்று சாதனை என்றும், இது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம், போர்ட் எலிசபெத் செயிண்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடந்த 5வது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை அபாரமாக வீழ்த்தியது.
இதன்மூலம், 6 போட்டிகள் கொண்ட இத்தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி, தென் ஆப்பிரிக்க மண்ணில் முதன் முறையாக தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.
இந்த வெற்றி குறித்து விராட் கோஹ்லி கூறுகையில், ‘தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில்முதன் முறையாக, தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
இது வீரர்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. துடுப்பாட்டம்பந்துவீச்சு பீல்டிங் என அனைத்து வகையிலும் ஒருங்கிணைந்து, சிறப்பாக செயல்பட்டதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.
தொடர்ந்து சிறப்பாக விளையாடி தொடரை 5 - 1 என்ற கணக்கில் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்டந்த 1992ஆம் ஆண்டில் இருந்து, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி, தற்போது தான் முதல் முறையாக ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது.
இதற்கு முன்பு டெஸ்ட், ஒருநாள், டி20 என எந்த தொடரையும் இந்தியா அங்கு வென்றதில்லைமேலும் இந்திய அணி தொடர்ச்சியாக 9 ஒருநாள் போட்டித் தொடர்களை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment