காதலர் தினத்தை விடுமுறை நாளாக அறிவிக்க வட்டாள் நாகராஜ் வேண்டுகோள்!
ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 14-ம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது வெளிநாடு களில் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டாலும், இந்தியாவில் ஒரு சில அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற னர் முக்கியமாக இந்துத்துவ அமைப்புகள் ஒருபடி மேல் சென்று வன்முறைகளில் ஈடுபடுகின்றனர் கையில் தாலியுடன்அ லையும் இத்த கைய அமைப்புகள் காரி மற்றும் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்யும் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்து தங்களது எதிர்ப்பை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் கர்நாடகாவில் 6 முறை எம்.எல்ஏ வாக இருந்தவரும் கர்நாடக சலுவாலி வட்டாள் பக்ஷா அமைப்பின் தலைவர் வா ட்டா நாகராஜ் காதலர் தினத்தையொட்டி இரண்டு ஆடுகளுக்கு திருமணம் செய்து வைத்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார் இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் காதலர் தினமான பிப்ரவரி 14 ம் தேதியை மத்திய அரசு விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் மேலும் காதல் திருமணம் செய்யும் ஜோடிகளுக்கு ரூ50 லட்சம் வரை நிதியுதவி அளிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment