காதலன் ஆகும் தகுதி யாருக்கு? ஓவியா புதுகண்டிஷன்
களவாணி கலகலப்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் ஓவியா. நடிகர் ஆரவ்வுடன்காதல்விவகாரத்தில் சிக்கி பரபரப்பானார். இதையடுத்து அவரது மார்க்கெட் சூடுபிடித்தது. தற்போது ஓவியாவை விட்டா யாரு, சீனி.
சிலுக்குவார்பட்டி சிங்கம் உள்ளிட்ட 4 படங்களில் நடித்து வருகிறார் ஓவியா பட வாய்ப்புகள் மற்றும் காதலன் யார் என்பது குறித்து ஓவியாவிடம் கேட்டபோது பதில் அளித்தார். அவர் கூறியதாவது: எப்போதும் நான் சுதந்திரமாக இருப்பதையே விரும்புவேன்.
வேலைக்கு சென்றால் அப்படியிருக்க முடியாது என்பதால் மாடலிங் துறையை தேர்வு செய்தேன் நடிகையாவேன் என்று அப்போது நினைத்துக்கூட பார்க்கவில்லை நடிகை வாய்ப்பு கிடைத்தபோது அதையே எனது துறையாக தேர்வு செய்துக்கொண்டேன்.
நான் நடித்த படங்கள் வெற்றி அடைகிறதா? தோல்வி அடைகிறதா? என்பதில் எனது எண்ணத்தை செலுத்துவதில்லை ஒவ்வொரு படத்துக்கும் 100 சதவீத உழைப்பை நான் தருகிறேன்.
மற்றது நடப்பதெல்லாம் விதிவசம் இருக்கிறது. எல்லாவற்றையும் மனதில் ஏற்றிக்கொண்டால் ஏமாற்றம்தான் மிஞ்சும். இன்றைக்கு எனக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள் நாளைக்கு அது கையளவு குறைந்துபோகலாம் ஒரு கட்டத்தில் எனக்கு யாருமே இல்லை என்ற நிலைகூட இருந்தது எனவே எதையும் நான் தலைக்கு ஏற்றிக்கொள்ள மாட்டேன் இன்று என்ன சாதித்திருக்கிறேனோ அதுவே எனக்கு சந்தோஷம்தான்.
நான் யாரை காதலிக்கிறேன் என்று கேட்கிறார்கள் எல்லோருடனும் எனக்கு உறவு இருக்கிறது. ஆனால் யாரையும் காதலராக தேர்வு செய்து கொள்ளவில்லை எனக்கு வரவேண்டிய கணவர் எப்படி இருக்க வேண்டுமென்றால் பெண்ணை எப்படி மதிக்கவேண்டும் அவளை எவ்வாறு நல்ல முறையில் நடத்த வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும் அப்படிப்பட்டவர்தான் என் இதயத்தில் இடம் பிடிக்க முடியும். இவ்வாறு ஓவியா கூறினார்.

Comments
Post a Comment